சரி. தனக்குத் தெரிந்த தொழிலில் இமாலய வெற்றி பெற்ற பிறகு, வேறு துறைகளில் முதலீடு செய்யுமளவிற்கு அபரிமிதமான பணம் ஈட்டிய பிறகு. தனது முதல் அடிப்படைத் தொழிலில் அழுத்தமாகக் காலூன்றிய பிறகுதான் அம்பானி குடும்பத்தினர் வெவ்வேறு துறையில் ஈடுபடுவதற்கும் அடிப்படை ஆர்வம் அவர்களுக் கிருந்திருக்கும். அதை விட முக்கியம் ஒவ்வொரு துறையிலும் நேரடியாக ஈடுபட அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆட்கள் கைவசமிருப்பார்கள். இப்படி அபரிமிதமான பணபலமும் ஆள்பலமும் இருக்கும் சூழலில் தான் வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டு வெற்றி பெறமுடிகிறது. பல ஆயிரம் கோடிகள் கைவச மிருக்கும் போது சில கோடிகளை வேறு துறை களில் முதலீடு செய்து பார்ப்பதில் தவறில்லை, அதுவும் தகுந்த ஆட்களில் நிபுணர்களின் உதவியோடு.

உங்கள் நிலை எப்படி? வெவ்வேறு துறைகளில் ஒரே சமயத்தில் ஈடுபட விரும்பும் நீங்கள் உங்களது துறைகளில் அழுத்தமாய் காலூன்றி யிருக்கிறீர்களா?

க்ஷி நீங்கள் புதிய துறைகளில் முதலீடு செய்ய விரும்பும் பணத்தை விட பலமடங்கு அதிகமாய் கையிருப்பு உள்ளதா?

எடுத்துக்காட்டாக ஐம்பது லட்சம் உங்களிட மிருக்கும் போது, வேறு துறையில் இரண்டி லிருந்து மூன்று லட்சம் வரை முதலீடு செய்வதில் தவறில்லை. உங்களிடமிருக்கும் கையிருப்பில் மிக அதிக அளவையோ அல்லது முழுமையாகவோ புதிய துறையில் முதலீடு செய்து விடாதீர்கள். குறிப்பாக தெரியாத தொழிலில் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்.

  • உங்களது அடிப்படைத் தொழிலோடு இன்னொரு புதிய தொழிலும் செய்ய வேண்டு மென்று தோன்றியவுடனே, உங்களுக்கு ஓரளவு தெரிந்த, ஆர்வமுள்ள துறையாகத் தேர்ந்தெடுங்கள்.
  • புதிய தொழிலில் ஈடுபடும் முன்னர், உங்களுக்கு நன்றாகப் பழக்கமான அத்தொழிலில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
  • அந்த தொழிலில் உங்களுக்கு அனுபவமே யில்லை ஒன்றுமே தெரியாது என்று உங்களிடம் வேலை பார்ப்பவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் மாறாக, இந்தத்துறையைப் பற்றி அதிகம் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
  • பணத்தை முதலீடு செய்வதோடு உங்கள் கடமை முடிந்து விட்டதாய் நினைக்காமல், இதுவும் உங்கள் தொழில் தான் என்ற உண்மையை எப்பொழுதும் நினைவில் கொண்டு பொறுப்பாய் செயல்படுங்கள்.
  • புதிய முயற்சிகளில் ஈடுபட்டாலும் உங்களது அடிப்படைத் தொழிலை மறந்து விடாமல் அல்லது அலட்சியப்படுத்தாமல் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுங்கள். உங்களை வேறு யாரும் தோற்கடித்து விடாதவாறு முழு விழிப்போடும், கவனத்துடனுமிருங்கள்.

எனவே என் அன்பிற்குரியவர்களே…….. ஆரம்பநிலையிலேயே,

இவரைப் பார்த்து…… அவரைப் பார்த்து….. என மற்றவர்கள் செய்வதைப் போன்ற தொழிலில் நீங்களும் ஈடுபட வேண்டுமென்று நினைத்து வெவ்வேறு தொழில்களில் ஈடுபடாமல் முதலில் உங்கள் அடிப்படைத் தொழிலில் கவனம் செலுத்தி முன்னேறுங்கள். மற்றவர்களுக்கு பணம் வருகிறதே என்று நீங்களும் களத்தில் இறங்காதீர்கள். பணம், ஒரே மாதிரியான தொழிலில் அனைவருக்குமே கிடைத்து விடுவதில்லை. அப்படிப் பார்த்தால், உலகில் அத்தனை பேருமே ஒரே தொழிலைத் தானே செய்து கொண்டிருப்பார்கள்?

பணபலம், ஆள்பலம் என எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், நாம் நமக்குத் தெரியாத தொழிலில் இறங்கினால் தற்போது செய்து கொண்டிருக்கும் தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். எனவே, ஆரம்பகட்டத்தில் முழுக்க, முழுக்க உங்களுக்கு நன்றாகத் தெரிந்த தொழிலில் எந்த வித கவனச் சிதறலுமின்றி 100% கவனம் செலுத்துங்கள். சில தவறுகள் நம் கண்ணுக்குத் தெரிந்தாலும் இதையெல்லாம் யாரு கவனிக்கப் போறாங்க? என்ற அலட்சியப் படுத்தும் குணத்தை அடியோடு விட்டு விட்டு முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் முழு கவனத்துடன் நம் தொழிலை செய்யும் போது தான் முழுமையான தரம் கிடைக்கும். 100% தரம், முழுமை அவசியம். முழுமையான கவனமும், அர்ப்பணிப்பு உணர்வும் கைவரும் போது தான் நாம் வெற்றியாளர்களாகிறோம். நாம் செய்யும் தொழிலில் மட்டுமல்லாமல், நம் தொழில் சார்ந்த விஷயங்களில், நமது துறையில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களை கவனிப்ப திலும், உற்றுநோக்குவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். நாம் செய்யும் இதே தொழிலை இன்னொருவர் நம்மை விட சிறப்பாக, வெற்றி கரமாக செய்து கொண்டிருக்கிறார் என்றால் அவரை நம் எதிரியாகக் கருதக் கூடாது. சொல்லப்போனால், அவர் தான் நமது குரு அவரிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதிலேயே நாம் கவனம் செலுத்தினால் அந்த கவனமே நம்மை சரியான பாதையில் வழி நடத்திக் கொண்டு செல்லும்.

தொழிலில் கவனம் அர்ப்பணிப்பு என்று சொல்லும் போதே அனைத்து அம்சங்களிலும் நாம் கவனம் செலுத்தி குறைகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்று தான் அர்த்தம் நம் வாடிக்கையாளர்கள் மீது நம் பொருள் அல்லது சேவை மீது நம் தொழில் வளர்ச்சி அல்லது விரிவாகத்தின் மீது, நமது பலம், பலவீனம், நிறை, குறைகள் மீது…….. இப்படி அத்தனை விஷயங் களிலும், அம்சங்களிலும் கவனம் செலுத்தினால் வெற்றியைத் தேடி நீங்கள் போக வேண்டாம் வெற்றி உங்களைத் தேடி வரும்.

இருள் விலகாத அதிகாலை நேரத்துல ஆற்றங்கரை ஓரமா நடந்து போய்க் கொண் டிருந்த ஒரு நபர் ரொம்ப போரடிக்குதேனு நினைச்சு கீழே கிடந்த கூழாங்கற்களை எடுத்து ஒவ்வொன்றாக ஆற்றில் வீசி எறிந்து கொண்டே, அப்பொழுது கேட்கும் அந்த க்ளக் சப்தத்தை ரசித்த படியே நடந்து போய்க் கொண்டிருந் தாராம்… நேரம் ஆக ஆக வெளிச்சம் மெதுவாக எட்டிப்பார்த்த போது இருவரும் எதேச்சையாக தன் கையிலிருந்த கல்லைப் பார்த்திருக்கிறார் அவ்வளவு தான்! அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார். காரணம் அவர் கையில் இருந்தது வைரம்…… வெறும் கூழாங்கற்கள் என நினைத்து அவர் இது வரைக்கும் வீசி எறிந்து கொண்டிருந் தது வைரக்கற்களை…….? எப்படி இருந்திருக்கும் அவருக்கு? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

நாமளும் இப்படித்தாங்க. நம்மகிட்ட இருக்குறது வைரக்கற்கள் என்பது தெரியாமலயே நாம வாழ்நாளை வீணாக்கிடறோம். வெறும் கூழாங்கற்கள் தான் நாம் என நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறோம். நாம் வெற்றி பெறத் தேவையான அத்தனை சக்தியும், திறமையும், ஆற்றலும் நமக்குள்ளேயே வைரக்கற் களா, பொக்கிஷமா புதைந்து கிடக்கின்றன. அதை உணர்ந்தோமென்றால் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோமென்றால், வெற்றிப் படிக்கட்டுகளில் மளமளவென ஏறத் தொடங்கி விடலாம்.

உங்கள் தொழிலில் சாதனைகளைக் குவிக்க நீங்கள் ஏற வேண்டிய ஒவ்வொரு படிக் கட்டுகளைப் பற்றியும் விரிவாய் பேசினோம். நம்பிக்கை, விடாமுயற்சி, நேர நிர்வாகம், சகிப்புத் தன்மை, முழுமையான கவனம், அர்ப்பணிப்பு உணர்வு…… என நாம் பார்த்த அத்தனை படிக் கட்டுகளுமே மிகமிக முக்கியமானவை உங்கள் பாதங்களை அழுந்தப் பதித்து, மிகவும் உறுதி யாகக் காலூன்றி இந்தப் படிக்கட்டுகளை கடந்து சென்று வெற்றி சிகரத்தில் ஏறிடுங்கள்.

சில படிக்கட்டுகள் வழுக்கலாம். சில உடைந்து போயிருக்கலாம். சில கரடு முரடான தாகக் கூட இருக்கலாம். வெற்றியாளரான உங்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? எதற்கும் கவலைப் படாமல் உறுதியான மனதோடு, தைரியத்தோடு ஒவ்வொரு படிக்கட்டுகளையும் கடந்து சென்று உங்களது புதையலைக் கண்டெடுங்கள்.

நீங்கள் சாதனைகளைக் குவிக்க,
வெற்றிச் சிகரத்தை அடைய
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
(நிறைந்தது)

மக்கள் புகாருக்கு
மதிப்பளிக்கும்
காவல் துறைக்கு ஒரு சபாஷ்

கடந்த மாதம் 24ம் தேதி மேட்டுப்பாளையம் சாலையில் அவினாசிலிங்கம் கல்லூரி சந்திப்பு, வடகோவை சந்திப்பு, கிக்கானி பள்ளி சந்திப்பு ஆகிய இடங்களில் மதியம் 12.15 மணியளவில் டிராஃபிக் சிக்னல் செயல்படவில்லை. அங்கே டிராஃபிக் போலீஸும் இல்லை. போக்குவரத்து ஸ்தம்பித்தது. மக்கள் குறைகளை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என பத்திரிக்கை வாயிலாக கோவை போலீஸ் கமிஷனர் திரு.சிவணான்டி அவர்கள் தெரிவித்த எண்ணிற்கு (99949 46969) கோவை, Wise care advise மற்றும் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் செயற்குழு உறுப்பினரான திரு. விஸ்வநாதன் அவர்கள் புகார் செய்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் அஇ நந்தக்குமார் அவர்கள் மூலமாக நிலமை சீர் செய்யப்பட்ட விபரம் அவருக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. இது போன்ற காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு உறுதுணையாய் உள்ள நமது கோவை போலீஸ் கமிஷனர் அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்கி மகிழ்வோம்.