251.ஒன்லி விமல்...ஒரு வரலாற்றின் வரலாறு

Wednesday, February 24, 2010

251.ஒன்லி விமல்...ஒரு வரலாற்றின் வரலாறு

ஒன்லி விமல்...ஒரு வரலாற்றின் வரலாறு

சந்தையியலின் பாலபாடம் "விதிகளுக்கு கட்டுப்பட்டு ஆடுகிறவன் ஜெயிக்க மாட்டான். புதிய விதிகளை உருவாக்கி அடுத்தவர் மீது திணிப்பவன் தான் ஜெயிப்பான்". இது சந்தையியலுக்கு மட்டும் பொதுவான விதியல்ல. உலகம் முழுவதற்கும் பொதுவான விதி. உலக வரலாறு எங்கும் இப்படி விதிகளை உருவாக்கியவர்கள் வென்ற கதைகளை தான் நிறைந்திருக்கும். அமெரிக்கர், பிரிட்டானியர், மங்கோலியர்கள், பன்னாட்டுகம்பனிகள், கம்யூனிச்டுகள், ஹென்றிபோர்டு, பில்கேட்ஸ்...என்று அந்த பட்டியல் நீளும்...

இந்தியாவில் அப்படி ஆட்டத்தின் விதிகளை தனக்கு சாதகமாக மாற்றிய மாபெரும் தொழில்தந்தை ஒருவரைப் பற்றிய பதிவே இது. அந்த ஒருவர் திருபாய் அம்பானி....

திருபாய் அம்பானி ஆட்டத்தின் விதிகளை வெறுமனே மாற்றவில்லை..ராம்நாத் கோயங்காவின் வார்த்தைகளில் சொல்வதானால் "மற்ற தொழிலதிபர்கள் சட்டத்தை அடிக்கடி கற்பழித்தனர். ஆனால் அம்பானி சட்டத்தை தமது வைப்பாட்டியாகவே ஆக்கிக்கொண்டார்..."

##########

அம்பானியின் வரலாற்றை இப்போது உற்றுநோக்கினால் அவர் அப்படி ஒன்றும் பெரிய சாதனைகளை செய்யவில்லை என முதலில் தோன்றும். இந்திரா மற்றும் ராஜிவ் ஆகியோரின் தயவை பெற்றார். லைசன்சுகள் குவிந்தன. எதிரிகளை அரசியல் பலத்தால் ஒழித்தார்..ஜெயித்தார்..அவ்வளவுதான் எனத்தோன்றும். ஆனால் விஷயம் அத்தனை சுலபமல்ல...

*************

அம்பானியின் காலகட்டத்தில் விதிமுறைகள் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. கம்யூனிசத்தின் உளுத்து,புளுத்த விதிமுறைகள் இந்திய தொழிலதிபர்கள் மிது திணிக்கப்பட்டிருந்தன. சான்றாக அந்தகாலகட்டத்தின் சில சட்டங்களை பார்ப்போம்

சூப்பர் டாக்ஸ் என்ற வருமானவரி இந்தியாவில் அப்போது புழக்கத்தில் இருந்தது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் வந்தால் 110% வருமானவரி கட்ட வேண்டும்...மயக்கம் போட்டு விழுந்துவிடாதீர்கள்...ஆம்..ஒரு அளவுக்கு மேல் யாரும் சம்பாதிப்பதை அப்போதைய சோஷலிச அரசாங்கம் விரும்பவில்லை.

இந்த விதியின் கீழ் தொழிலதிபர்களுக்கு இரண்டே ஆப்ஷன்கள் தான் இருந்தன. ஒன்று...அந்த வரம்புக்கு கீழே சம்பாதிப்பது அல்லது வரி ஏய்ப்பு செய்வது..அம்பானி இதில் எந்த விதியை பின்பற்றினார் என்பதை சொல்ல வேண்டியதில்லை...

சொல்ல மறந்துவிட்ட ஒரு தகவல்..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2002 வரை ஒரு பைசா கூட வருமானவரி கட்டியதில்லை (2002க்குபிறகு என்ன ஆனது என்று என எனக்கு தெரியாது. இந்திய கம்பனிகளை அதற்கப்புறம் ஃபாலோ செய்வதை நான் நிறுத்திவிட்டேன்)

சொல்ல மறந்துவிட்ட இன்னொரு கொசுறுத்தகவல் ரிலையன்ஸ் வருமான வரிகட்டாமல் இருக்க காரணம் அது செய்த ஏற்றுமதிகள், முதலீடுகள்,அந்த முதலீடுகளுக்கு கிடைத்த எக்சைஸ், விற்பனைவரி ஆகியவையே..65,000 கோடி வருட விற்பனை உள்ள கம்பனியிலிருந்து எத்தனை ஆயிரம் கோடி எக்சைஸ் மற்றும் விற்பனைவரி கிடைத்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்

********************

"என்னிடம் இல்லாத ஒரே குணம் ஈகோதான்" என அம்பானி அடிக்கடி சொல்வார்."எனக்கு வேலை நடக்கவேண்டுமானால் அரசு அலுவலகங்களின் பியூனுக்கு கூட நான் சல்யூட் அடிக்க தயார்" என்பார். அந்த குணம்தான் அவரை சிகரங்களின் உச்சிக்கு கொண்டு சென்றது.எந்த அளவுக்கும் கீழே இறங்கி எத்தனை கீழானவர்களுடனும் போட்டி போட அவரால் முடிந்தது.அந்த விஷயத்தில் அவர் ஈகோ பார்க்கவே இல்லை.

1982ல் அம்பானி இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தார். ஒன்லி விமல் எனும் அவரது விளம்பரங்கள் அப்போது இந்தியாவெங்கும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தன.மும்பை பங்குசந்தையில் சில புரோக்கர்கள் வழக்கமாக மற்ற கம்பனிகளில் காட்டும் சித்துவிளையாட்டுகளை ரிலையன்ஸ் பங்குகளிலும் காட்டினர்.ஷார்ட்செல் எனும் முறையில் ரிலயன்சின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு விற்றனர்.(அப்போதிருந்த பத்லா முறையை பற்றி இப்போது விளக்க போர் அடிக்கிறது)எனினும் அந்த புரோக்கர்களின் திட்டம் இதுதான்.

"மூன்று வாரங்கள் கழித்து ரிலையன்சின் பங்குகளை இப்போதைய விலையை(152) விட 30 ரூபாய் கம்மியாக(122) தருகிறேன்" என்று சொல்லி கையில் பங்கு இல்லாமலேயே ஷார்ட்செல் முறையில் பங்குகளை விற்பது. தரைமட்டத்துக்கு வீழும் பங்குகளை மூன்றுவாரங்கள் கழித்து 132க்கும் குறைவாக வாங்கி 122க்கும் விற்பனைவிலைக்கும் உள்ள வித்யாசத்தை மட்டும் செட்டில் செய்து லாபத்தை எஞ்சாய் செய்வது.

இந்த ஆட்டத்தில் மும்பை பங்குசந்தையின் பெரும்புள்ளிகள் ஈடுபட்டனர். வழக்கமாக பெரிய கம்பனிகளே இவர்களை பகைத்துக்கொள்ளாது. ஆனால் அம்பானி அப்படி விடவில்லை.களத்தில் இரங்கினார். புரோக்கர்கள் விற்ற அனைத்து பங்குகளையும் 152க்கு வாங்கினார்.புரோக்கர்கள் பங்குகளை டெலிவரி கொடுக்க வேண்டிய நாள் நெருங்கியது.. ஆனால் இப்போது பங்குகளின் விலை 180 ரூபாய்...180க்கு புரோக்கர்கள் பங்குகளை வாங்கி 132க்கு அம்பானியின் பினாமிகளுக்கு(ஃபிரென்ட்ஸ் ஆஃப் ரிலையன்ஸ் எனும் அமைப்பு) கொடுக்க வேண்டும்..பெரும் நஷ்டம்....அழுது வீங்கிய கண்களுடன் மும்பை பங்குசந்தையிடம் முறையிட்டனர் புரோக்கர்கள்..அதனால் ஏற்பட்ட குழப்பத்தில் மும்பை பங்குசந்தையே மூன்று நாட்களுக்கு மூடப்பட்ட வரலாற்று சம்பவமும் நிகழ்ந்தது.

மீண்டும் பங்குசந்தை திறந்தபோது புரோக்கர்கள் பல நூறு கோடி நஷ்டப்பட்டிருந்தனர். அத்துடன் 'ரிலைய்னசுடன் விளையாடாதே" என்ற அச்சமூட்டும் பாடத்தையும் அவர்கள் கற்றனர்.

சாதாரண புரோக்கர்களுக்கு மட்டும் அம்பானி இந்த பாடத்தை கற்றுத்தரவில்லை. பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா, இந்தியன் எக்ஸ்பிரசின் ராம்நாத் கோயங்கா முதலியோருக்கும் இந்த அச்சமூட்டும் பாடத்தை தனக்கே உரிய முறையில் கற்றுத்தந்தார்.எமெர்ஜென்சியின் போது இந்திராவையும், போபர்ஸ் ஊழலின்போது ராஜிவையும் வீழ்த்திய ராம்நாத் கோயங்கா தோல்வியை சந்தித்தது அம்பானி என்ற அந்த இமயத்திடம் மட்டுமே.

விதிகளை வளைத்து அம்பானி ஆடிய ஆட்டம் 1992ல் முடிவுக்கு வந்தது. அப்போது மன்மோகனின் புதிய பொருளாதார கொள்கை அம்பானிக்கு சாவுமணி அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்தியாவில் நுழையும் பன்னாட்டு பகாசுரர்கள் ரிலையன்சை எடுத்து விழுங்குவார்கள் என அனைவரும் ஆருடம் சொன்னார்கள்...

அப்படி எதுவும் நடக்கவில்லை....

நேரமியான போட்டியிலும் தன்னால் ஜெயிக்க முடியும் என்பதை ரிலையன்ஸ் அதன்பின் நிருபித்தது. உலகவர்த்தகத்தில் குதித்து பிரமிப்பூட்டும் சாதனைகளை ரிலய்னஸ் புரிந்தது.தனது சாதனைகள் அழுகிய சோஷலிச சட்டங்களின் விளைவுகள் அல்ல..நேர்மையான வர்த்தகபோட்டியிலும் தன்னால் உலக அரங்கில் ஜெயிக்க முடியும் என்பதை ரிலையன்ஸ் பிரமிப்பூட்டும் முரையில் நடத்திகாட்டியது...

ஆம்..ரிலையன்ஸ் ஜாம்நகரில் பெட்ரோகெமிக்கல் தொழிர்சாலையை கட்டியபோது அதற்கு உலகின் புகழ்பெற்ற பன்னாட்டுகம்பனி ஒன்றின் திறமை வாய்ந்த நபர்களை மிக அதிக சம்பளம் கொடுத்து தன்னிடம் இழுத்தது.ஆத்திரமடைந்த அந்த பன்னாட்டு கம்பனியின் சியீஓ முகேஷ் அம்பானிக்கு போன் செய்து "இதை நிறுத்திவிடுங்கள்" என மன்றாடினாராம்.

அப்படி கேட்ட CEO Jack Welch..

அந்த பன்னாட்டுகம்பனி ஜெனெரல் எலக்ட்ரிக்

*******

"நம்மை ஆள்வோரை மாற்ற நம்மால் இயலாது.ஆனால் அவர்கள் நம்மை எப்படி ஆள்கின்றனர் என்பதை நம்மால் மாற்ற இயலும்" என அம்பானி அடிக்கடி சொல்வார்...

இன்று உலக அரங்கில் ரிலையன்ஸ் வெற்றிக்கொடி நாட்ட காரணம் அதுதான்...

Fortune 500 கம்பனிகளில் நுழைந்த முதல் இந்திய தனியார் கம்பனி அம்பானியின் ரிலையன்ஸ் தான்....

இத்தனை திட்டம் தீட்டி வெற்றி ஈட்டியும் தன் தனிவாழ்வில் உயில் எழுதாமல் செத்துபோன விந்தை மனிதரும் அம்பானிதான்...

அம்பானியின் வெற்றி கார்பரேட் இந்தியாவின் வெற்றிமட்டுமல்ல. தொழில்முனைவோன் ஒவ்வொருவனின் வெற்றியுமாகும்....அரசின்விதிகள் எத்தனை கேவலமாக இருந்தாலும், அது எத்தனை கடைகெட்ட அரசாக இருந்தாலும் ஊக்கமுடையவன் வெல்வான் என்பதற்கு கண்முன் நிற்கும் ஒரே உதாரணம் அம்பானி தான்.

அமெரிக்காவுக்கு எப்படி ஒரு ஹென்ரிபோர்டோ, இந்தியாவுக்கு அப்படி ஒரு திருபாய் அம்பானி...

அவரை நான் நேசிப்பது அவரை மற்றவர்கள் வெறுக்கும் அதே காரணங்களுக்காகத்தான்...

வணங்காமுடிகளை எனக்கு மிகவும் பிடிக்கும்.

0 comments:

Post a Comment

 

2009 ·Exceptions by TNB